Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டி நிக்குதே..! வளைந்து நெளிந்த சாலை! – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (11:01 IST)
கோவை மாவட்டத்தில் சாலை போடும் பணியின்போது வாகனம் நின்ற இடங்களை தவிர்த்து சாலையை வளைத்து, நெளித்து போட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை அமைக்கப்படும் பணிகளின்போது நடைபெறும் சம்பவங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது.

அப்பகுதியில் பழுதான மின் மயான வாகனம் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. சாலை அமையும் இடத்தில் இருந்த அந்த வாகனத்தை அப்புறப்படுத்தாமல் அது நின்ற இடத்தை விடுத்து சாலையை வளைத்து, நெளித்து அமைத்துள்ளனர்.

ALSO READ: “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!”; விளம்பரம் செய்த மதுரைக்காரர் கைது!

முன்னதாக சேலத்தில் இதுபோலவே சாலைகள் அமைத்தபோது அங்கிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தாமல் அவற்றின் சக்கரங்கள் புதையும்படி சாலையை அமைத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. முறையாக வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு சரியாக, நேர்த்தியாக சாலைகள் அமைக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு..!

கோவை மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பள்ளிகளுக்கு விடுமுறை..!

2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. த்ரில் அனுபவம்..!

தடையை மீறி மதுரையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: அண்ணாமலை

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? தமிழிசைக்கு கிடைத்த புதிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments