Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை வெடி விபத்து : பலியான முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:01 IST)
கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக பலியான முபின் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.

நேற்று  முந்தினம்  அதிகாலை கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார்.

இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டார். இந்த வழக்கில் வெளியாகியுள்ள பல தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த முபினின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முபினும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து சில பொருட்களை காரில் ஏற்றும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதை கொண்டு போலீஸார் அந்த மற்ற நபர்களை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் தற்போது முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் காரில் எடுத்து சென்ற மர்ம பொருள் என்ன? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ: கோவை வெடிவிபத்து: ஜமேஷா முபீன் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சி வெளியீடு

இந்த  நிலையில், கோவையில் கார் சிலிண்டர் விபத்தில் பலியான உடலை அடக்க செய்ய அனைத்து ஜமாத்துகளும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவதும், முபின்  சதி முயற்சி உடந்தையாக செயல்பட்டதாக கருதி,  அமைதியை விரும்புவதாலும், சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் வேண்டி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், மனிதாபிமான அடிப்படையில் பூமார்க்கெட்டில் ஜமாத்தில் முபீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments