Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவுக்கு எதிராக உப்பு பேரணி: கோவை பாஜகவினர்களின் விநோத போராட்டம்

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (04:05 IST)
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை பாஜகவினர் உப்பு பேரணி நடத்தி வைரமுத்துவுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார் இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆண்டாள் தான் எழுதிய எந்தப் பாசுரங்களுக்கும் காசு வாங்கியதில்லை. வைரமுத்து காசு வாங்காமல், எந்தப் பாடலையும் எழுதியதில்லை. தமிழை வைத்து, சினிமாவில் பாடல் எழுதி வயிறு வளர்க்கும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. ஆண்டாள் குறித்து தவறான தகவல் பரப்பிய வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

வைரமுத்துவுக்கும் தினமணி நாளிதழுக்கும் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே போனாலும் வைரமுத்து தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments