Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. நாளை ‘I.N.D.I.A' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பு..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (17:03 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றதாகவும் டெல்லியில் நாளை நடைபெறும் ‘I.N.D.I.A' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன  
 
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தமிழக அரசு பொது மக்களை மீட்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை டெல்லியில் நடைபெறும் ‘I.N.D.I.A' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கோவையிலிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். 
 
அதுமட்டுமின்றி தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்ய பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க பிரதமரை அவர் நேரில் சந்தித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

அடுத்த கட்டுரையில்
Show comments