Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்: முதல்வரின் குழந்தைகள் தின செய்தி!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:09 IST)
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என குழந்தைகள் தின விழா செய்தியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
 
குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்! 
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!
 
குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.  குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!
 
குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்