Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது முறையாக ஜவுளிக்கடையில் தீ விபத்து: மதுரையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (07:39 IST)
மதுரையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென ஜவுளிக்கடை ஒன்றில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின 
 
இதனை அடுத்து மறுநாளே அதே பகுதியில் இன்னொரு ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் தீப்பிடித்து உள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 3வது முறையாக மதுரையில் உள்ள ஜவுளி கடைகளில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments