Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் செயலாளர்கள் மாற்றம்.! முதன்மை செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ் நியமனம்.!!

Senthil Velan
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:53 IST)
முதலமைச்சரின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், முதன்மை செயலாளர் பதவிக்கு உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் என்.முருகானந்தம் வகித்து வந்த முதல்வரின் முதலாவது முதன்மை செயலாளர் பதவிக்கு உமாநாத் ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: மருத்துவ மாணவி கொலை வழக்கு.! வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏன்.? மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

இதே போன்று முதல்வரின் இரண்டாவது முதன்மை செயலாளராக எம். எஸ். சண்முகமும் ஐ.ஏ.எஸ்., முதல்வரின் மூன்றாவது முதன்மை செயலாளராக அணு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments