Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலுக்கு இப்டினா.. பராசக்தி படம் இப்போ வந்தா? - ப. சிதம்பரம் கேள்வி

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (09:31 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சினிமா துறையினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “திரைத்துறையினருக்கு ஒரு செய்தி; சட்டம் வந்துகொண்டிருக்கிறது.  இனிமேல் நீங்கள் அரசின் திட்டங்களை பாராட்டி டாக்குமெண்டரி படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மெர்சலில் சில வசனங்களை நீக்க சொல்லி பாஜக கேட்கிறது. வசனங்களில் புரட்சி படைத்த பராசக்தி படம் தற்போது வெளியானால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments