Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் பணி எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:52 IST)
சென்னையில் அடுத்த கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
1. சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (sass) சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து (போரூர் ஏரி சிவன்கோயில் அருகில்) குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன்,டிரக், பால் மற்றும் வணிக
வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்களுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
 
2. போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (31, 55) பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள், கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல்மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.
 
3. சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவிதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவனை, ஏசிஏஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போருர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
 
4. பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
5.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான depavadi traffic@gmail.com மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthypekecpg.com அனுப்பலாம்.
 
6. மேலும் பொதுமக்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் http://twitter.com/avndipolice மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து
 
கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் டி15 எஸ். ஆர். எம்.சி போக்குவரத்து அவர்களின் கைப்பேசி எண் 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறை எண்.7305715666 க்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments