சென்னை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்: நடை திறக்கப்படும் நேரம் அறிவிப்பு..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (17:58 IST)
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்க இருப்பதை அடுத்து புத்தாண்டு தினத்தில் பலர் அதிகாலை கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே சென்னையில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் அனைத்து கோவில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில்  உள்பட அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடை திறக்கப்படும் என்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தி நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலிலும் புத்தாண்டை ஒட்டி அதிகாலை சிறப்பு தரிசனத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments