Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நீங்க என்ன மீடியா? பேரு என்ன?’ – அண்ணாமலை பேச்சுக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (16:09 IST)
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசிய விதம் குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது கேள்வி கேட்ட ஒவ்வொரு நிருபரிடமும் “உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த தொலைக்காட்சி?” என தொடர்ந்து அவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் யூட்யூப் செய்தி சேனல்கள் குறித்து அவர் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. முன்னதாக ஒருமுறை பத்திரிக்கையாளர்களை ‘குரங்கு போல தாவுகிறீர்கள்’ என அண்ணாமலை பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசிய விதம் குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஊடகங்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் மன்றம், ஊடகங்களுடன் நாகரீகமான உறவை பேண அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments