Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸுக்கு சவால் விட்டு பாட்டு: கைதான கானா சேட்டு

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (14:16 IST)
பிரபல ரவுடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் போலீஸுக்கு சவால் விடுமாறு பாட்டு பாடிய பிரபல கானா பாடகரும், அவரை புக் செய்தவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் சென்னை திருவெல்லிக்கேணி பகுதியில் பிரபல ரவுடியான ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பாட்டுப்பாட “கானா சேட்டு” என்று எல்லாராலும் அறியப்படும் மணிகண்டனை புக் செய்திருக்கிறார்கள். சேட்டு பாடும்போது ஆனந்தனின் சாவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என்ற ரீதியில் பாடுமாறு சொல்லியிருக்கிறார்கள்.

சேட்டு போலீஸாரை அவமதிக்கும் வகையிலும், அவர்களுக்கு சவால் விடும் வகையிலும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதை வீடியோ எடுத்து சிலர் டிக் டாக்கில் போட்டுள்ளனர். இதை பார்த்த சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கானா சேட்டு மற்றும் அவரை புக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 6 பேரை கைது செய்திருக்கின்றனர் போலீஸார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments