Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை இந்து தீவிரவாதி என கூறிக்கொண்ட ஆசாமி! – கைது செய்த போலீஸார்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (08:55 IST)
தன்னை ஒரு இந்து தீவிரவாதி என்று கூறிக்கொண்டு, பெரியார், அம்பேத்கார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் சென்னையின் 134வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்று அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டது. அதில் பேசிய அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வர் சந்திர சுப்ரமணியன் என்பவர் தன்னை ஒரு இந்து தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டதுடன், கோட்சே காந்தியை கொல்லும் முன் ஜின்னா, அம்பேத்கார், பெரியார் ஆகியோரை கொன்றிருக்க வேண்டும் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், ஈஸ்வர் சந்திர சுப்பிரமணியனை சைபர் க்ரைம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments