Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (07:17 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அறிவிப்பு ஒன்றின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது 
 
தென்கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை வளிமண்டல சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 
 
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழையும் தென் தமிழகம் மற்றும் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் வரும் 16ஆம் தேதி நீலகிரி கோவை தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments