Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மற்றும் ஜூலை 18 19 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் 
 
நாளை நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
 
ஜூலை 18 19 ஆகிய தேதிகளில் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் 
 
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments