Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
புதன், 18 செப்டம்பர் 2024 (07:12 IST)
இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வரும் நிலையில், சற்றுமுன் இன்று காலை 10 மணிக்குள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதாகவும் மழை அளவு குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவில் போய் மருத்துவ குப்பையை கொட்டுவேன்.. நானே லாரியில் போவேன்! - அண்ணாமலை எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. அடுத்து என்ன?

இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

பணியில் மோதல்.. விஏஓவை அலுவலகத்தில் பூட்டி வைத்த உதவியாளர்.. பெரும் பரபரப்பு..!

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு காலியா? விலகிய நிர்வாகிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments