Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சோதனை ஓட்டம்! 100 பேருந்துகள் இயக்கம்..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:35 IST)
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 100 பேருந்துகளை முதல் கட்டமாக இயக்கிய சோதனை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் அறியப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களின் ஒன்றாக அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்ட பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் சென்னை நகருக்குள் போக்குவரத்து  நெருக்கடி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments