Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 + 20: அதிமுகவை எதிர்த்து திமுக கண்டன போராட்டம்!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (16:32 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைத்து கண்டன கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. 
 
இன்றும், நாளையும் இந்த கண்டன் கூட்டம் சுமார் 127 இடங்களில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. 
 
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதற்கான விசாரணை நீதிபதி, மகாதேவன் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில், சட்டம் ஒழுங்கு பாதிப்பு இருப்பதால்தான் கண்டன கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை என வாதம் முன்வைக்கப்பட்டது. 
 
ஆனால், திமுக தரப்பு, ஏற்கனவே பிற கட்சியினருக்கு நாங்கள் கேட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என கேட்கப்பட்டது. 
 
இதன் பின்னர், 127 இடங்களில் 102 இடங்களுக்கு அனுமதியளிக்கபப்ட்டுள்ளது. மேலும், 5 இடங்களின் கண்டன் கூட்டம் நடத்த மறுக்கப்பட்டும், மீதமுள்ள 20 இடங்களுக்கு பதில் வேறு இடங்களை பரித்துரைக்க கோரியும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments