Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டில் மூடப்படுகிறது வழக்கறிஞர்கள் அறை: ஆன்லைனில் மட்டுமே விசாரணை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:22 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். நேற்றும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையில் கொரோனாவால் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சென்னையில் இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் விசாரணையில் கொரோனா வைரஸால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே இனி வழக்குகள் விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகள் தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐகோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த போதும் வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டது என்பதும் ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments