Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரவுடிகள் கேங் வார்? பிரபல ரவுடி படுகொலை!

crime
Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (10:18 IST)
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அம்பேத்கர் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்கள் ஆயுதங்களோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர்.

அதற்குள் அங்கு ரவுடிகள் தப்பி சென்று விட்ட நிலையில் புதர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

ALSO READ: ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: நீதிபதிகள் கருத்து

விசாரணையில் உயிரிழந்தவர் ரவுடி ப்ரைட் ஆல்வின் என்பதும், அவர்மேல் ஏற்கனவே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆல்வினை கொன்றவர்கள் யார்? முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்த கேங் வாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments