Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அரசு மருத்துவர் தற்கொலை: 3 நாட்கள் கழித்த பிணத்தை கைப்பற்றிய போலீஸ்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (13:45 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மூன்று நாட்கள் கழித்து அவருடைய பிணத்தை போலீசார் மீட்டு உள்ளனர்  
 
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக கார்த்தி என்ற 42 வயது நபர் பணியாற்றி வந்தார். இவரது வீடு ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ளது. 
 
இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்று இருந்த நிலையில் அவரது வீடு பூட்டி கிடந்ததாகவும் 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் மருத்துவர்  கார்த்தியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்த உறுதி செய்யப்பட்டது. 
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மருத்துவர் கார்த்தி மூன்று முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்றும் 42 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை என்றும் இதயத்தில் சில பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments