சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள் எது? – பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும், கோடம்பாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் போரூரில் 2 பேருக்கும், சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த பட்டியலில் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தன்னார்வலர்களுடன் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments