Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்த விவகாரம்.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (12:47 IST)
மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்தத சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளதக செய்தி வெளியாகியுள்ளது.
 
சென்னையின் முக்கிய சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள  அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக மும்பையில் கடந்த 14ஆம் திடீரென புழுதி புயல் வீசியதால் மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாகவும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த  விவகாரத்தில் ஏற்கனவே அந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தினர் புகார் மனு அனுப்பியதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments