Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல்காற்று வீசும் என வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் மேகமூட்டம்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:41 IST)
அனல்காற்று வீசும் என வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் மேகமூட்டம்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அனல் காற்று வீசும் என்றும் வெப்பநிலை 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் இதனால் 12 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மெரீனா பீச்சில் இன்றும் மிதமான வானிலை நிலவியது என்பது குறைவான வெப்பநிலை தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இன்று மழை வர வாய்ப்பு உள்ளது போல் மேகமூட்டமாக இருப்பதால் இன்று மாலைக்குள் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில், மேகமூட்டத்துடன் சென்னை கடற்கரை உள்ளது. இதேபோல் வரும் நாட்களிலும் வெப்பநிலையில் நல்ல வீழ்ச்சி இருக்கும்’ என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments