Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்காலிக விமான நிலையமாக மாறியது அரக்கோணம் கடற்படை விமான தளம்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2015 (11:27 IST)
சென்னையில் பெய்து வரும் தீவிர கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ஆம் தேதி வரை மூடப்படுகிறு என்று இந்தியா விமான ஆணையம் தெரிவித்ததை அடுத்து அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் தற்காலிக விமான நிலையமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
சென்னையில் பெய்து வரும் தீவிர கனமழை காரணமாக  பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதாலும் கடந்த திங்கட் கிழமை முதல் விமான சேவை துண்டிக்கப்பட்டது.
 
சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தில்வெள்ளநீர் அதிக அளவில் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களும் தண்ணீர் மூழ்கும் நிலையில் இருக்கிறது.
 
இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக விமான நிலையமாக செயல்படும் இந்தியா விமான ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்  விமான பயணிகளின் சிரமத்தை சற்று குறைத்துள்ளது. கடற்படைக்கு சொந்தமான இந்த விமான பயிற்சித் தளம் ஆசியாவிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தற்போது விமான தறையிறக்குவதற்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக சென்னை விமான ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments