Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (18:24 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ALSO READ: சென்னையின் சொந்த பையன் அஸ்வின்..! 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!
 
இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments