Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப் பதிவு

Sinoj
சனி, 23 மார்ச் 2024 (15:32 IST)
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம்,  தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
 
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களவிய தேர்தலுக்கான   பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
 
இந்த நிலையில், தென் சென்னை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்த்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதாகவும், அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாகவும்  பறக்கும் படையினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
 
இப்புகாரின் அடிப்படையில், ஜெயவர்தன், திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி ஆகியோர் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்