Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழச்சி மீது பாய்ந்தது வழக்கு: முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதால் நடவடிக்கை!

தமிழச்சி மீது பாய்ந்தது வழக்கு: முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதால் நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:47 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தவறான தகவல் பரப்பிய பிரான்சில் வசிக்கும் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
சுவாதி, ராம்குமார் வழக்கில் அதிரடியாக பல தகவல்களை ஃபேஸ்புக்கில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து நேற்று பதிவிட்ட தகவல் தமிழகத்தில் காட்டு தீ போல் பரவியது. இதனால் நேற்று மாலை முதல் தமிழகம் பதற்றமாக காணப்பட்டது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு சில விஷமிகள் அவரது உடல்நிலை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதனையடுத்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தது.
 
இந்நிலையில் தான் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து பிரான்சில் வசிக்கும் தமிழச்சி நேற்று பேஸ்புக்கில் தவறான தகவலை பதிவிட்டார். இதனையடுத்து இந்த தகவல் வைரலாக பரவியது. நேற்றைய தினம் சென்னை மிகவும் பதற்றமாக இருந்தது.
 
இதனையடுத்து தமிழச்சி மீது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் புகார் அளித்தார். அவர் இந்த புகாரை காவல்துறை ஆணையரிடம் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார் ஆணையர்.
 
இந்த புகாரை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரான்சில் வசிக்கும் தமிழச்சி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தமிழச்சி தற்போது பிரான்சில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படி அனுக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments