Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் எடுக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்: 10க்கும் மேற்பட்டோர் பரிதாபம்

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (12:22 IST)
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


 

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கும், சில்லரைகளை பெறுவதற்கும் வங்கிகளில் குவிந்துள்ளனர். இந்நிலையில், கோவை சின்னியம்பாளையம் அருகே இந்தியன் வங்கிக் கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஏராளமானோர் காத்திருந்தனர்.

அப்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இருசக்கர வாகனம், கார் மற்றும் வரிசையில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது.

இதில், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments