கேப்டன் எங்கள விட்டு போய்டீங்களே.. மொட்டை போட்டு துக்கம் அனுசரிக்கும் தேமுதிக நிர்வாகிகள்!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (09:55 IST)
கேப்டன் விஜயக்காந்த் மறவையொட்டி தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்- அஞ்சலி செலுத்தும் இடத்தில் கட்சி நிர்வாகிகள் மொட்டை போட்டு துக்கத்தை அனுசரித்து வருகின்றனர்


 
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்., மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு காலையில் தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உசிலம்பட்டி நகர, ஒன்றியம் மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி, எழுமலை பேருர் கழக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆறு பேர்  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமுடி எடுத்து மொட்டை போட்டு துக்கத்தை அனுசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments