Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ, நர்சிங் படிப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (22:28 IST)
கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மெடிக்கல் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் அனைத்து மருத்துவ  மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments