Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது..! கைவிரித்த நீதிமன்றம்..!!

Senthil Velan
புதன், 27 மார்ச் 2024 (16:44 IST)
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
 
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  மதிமுகவின் மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டுமென வேண்டுமென மதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால்தான்  சின்னம் ஒதுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: களமிறங்கிய பாஜக வேட்பாளர்.! ராதிகாவுக்கு ஷாக்..! விருதுநகரில் உட்கட்சி பூசல்..!!
 
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மதிமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments