சென்னையில் பேருந்து ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்: காவல்துறை சமாதானம்

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:04 IST)
சென்னையில் பேருந்து ஓட்டுனரை தாக்கிய மாணவர்கள்: காவல்துறை சமாதானம்
சென்னையில் பேருந்து ஓட்டுனரை மாணவர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறினார்கள். அப்போது படிக்கட்டில் நிற்க வேண்டாம் என மாணவர்களை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கூறினார் 
 
இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து பேருந்து ஓட்டுனரை திடீரென மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் சென்ற அனைத்து பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

அடுத்த கட்டுரையில்
Show comments