Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்: இமெயில் மிரட்டலால் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (09:46 IST)
சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மிரட்டல் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலி மிரட்டல் வந்த நிலையில் இன்று சென்னையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

ஒய்எம்சிஏ  கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் சோதனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

சில மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மிரட்டல் இமெயில் வந்த ஐபி முகவரியை கண்டுபிடிக்க தற்போது சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழ்நாட்டில் அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments