Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் திடீரென இணைந்த பாஜக பிரபலம்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (18:09 IST)
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் அதிமுக திமுக உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலை சந்திக்க காய் நகர்த்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த முறை திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுமே தனித்துப் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் சின்ன சின்ன கட்சிகளின் நிலைமை திண்டாட்டம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் ஒரு அரசியல் கட்சியில் இருந்து மற்றொரு அரசியல் கட்சிக்கு தாவும் நபர்களின் எண்ணிக்கையும் புதிதாக அரசியல் கட்சியில் இணையும் பிரபலங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் பாஜகவின் பிரமுகரான வேதரத்தினம் என்பவர் தற்போது திடீரென பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தனிப் பெரும் செல்வாக்கு உடையவர் வேதரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று காணொலி மூலம் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் வேதரத்தினம் திமுகவில் இணைந்து உள்ளதாகவும் இவரது இணைப்பால் நாகை மாவட்டத்தில் திமுக வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது பாஜகவின் பிரபலம் ஒருவர் திமுகவில் இணைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments