Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஒரு நீதி; காவிரிக்கு ஒரு நீதியா? - கருணாநிதி

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (21:16 IST)
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தை மீற முடியாது என்ற மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவ்வாறு செய்ய இயலாதென்று கூறுகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில், ”ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்கச் சொல்லி மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்க வேண்டுமென்று கேட்டபோது, “உச்ச நீதிமன்றம் சொன்னதை மீற முடியாது” என்று மத்திய அரசின் சார்பில் அப்போது சொன்னார்கள்.
 
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவ்வாறு சொன்ன மத்திய அரசு, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அவ்வாறு செய்ய இயலாதென்று மறுப்புக் கூறுகிறது.
 
மத்திய பாஜக அரசு, அரசியல் ரீதியாகக் கிடைத்திடும் ஆதாயத்தை  அடிப்படையாகக் கொண்டே, உச்ச நீதிமன்ற உத்தரவைக் கூடத் தலை வணங்கி ஏற்கும் அல்லது தலை நிமிர்ந்து எதிர்க்கும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் எடுத்துக்காட்டுகள்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments