Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (20:50 IST)
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர் ஆதரவு அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு  பாஜகவின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டேன்.

2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசாணை 149ஐக் கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக சார்பாக ஏற்கனவே 12/02/2022 மற்றும் 10/04/2023 ஆகிய தேதிகளில் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம்.

ஆசிரியப் பணி எனும் உன்னதமான பணியில் இருக்கும் சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments