Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மாநில தலைவர் தேர்தல்: தமிழிசை மாற்றப்படுவாரா?

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (08:44 IST)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கட்சியில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக பாஜகவின் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அது மட்டுமின்றி தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழகத்திலும் பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது 
தற்போது தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் நிலையில் மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து எஸ்வி சேகர் உள்பட ஒரு சிலர் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது 
 
தமிழக பாஜக கடந்த பல வருடங்களாக நோட்டாவிடம் மட்டுமே போட்டியிட்டு வரும் நிலையில், இக்கட்சி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் புதிய தலைவர் வேண்டும் என பாஜக தொண்டர்கள் கருதுகின்றனர். புதிய தலைவர் வந்தால் பாஜக தமிழகத்தில் வளரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments