Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்யூனிஸ்டுகளை கலாய்த்த எஸ்.வி சேகர்; ஆமா சாமி போட்ட எச் ராஜா?

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:34 IST)
கேரளா தங்க கடத்தல் விவகாரத்தை குறிப்பிட்டு எஸ்.வி.சேகர் கம்யூனிஸ்டுகளை கலாய்த்துள்ளார். 
 
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தபோது 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர் என்பதும், இந்த கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து ஸ்வப்னா தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்காக தேசிய பாதுகாப்பு முகமை தீவிர முயற்சியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஸ்வப்னா தமிழகத்திற்கு தப்பியதாக கூறப்பட்ட நிலையில் அவர் தேசிய புலனாய்வு ஆணையத்தின் அதிகாரிகளால் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் இதனை குறிப்பிட்டு பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர் தனது விட்டர் பக்கத்தில், 
25 கோடிக்கு ஆசைப்பட்டா அது தமிழக கம்யூனிஸ்ட்...
25 கிலோ தங்கத்துக்கு ஆசைப்பட்டா அது கேரள கம்யூனிஸ்ட்....
25 நாட்டோட எல்லைகளுக்கு ஆசைபட்டா அது சீன கம்யூனிஸ்ட் என பதிவிட்டுளார்.

இந்த பதிவிற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, பிரமாதம் சகோதரரே என பதிவிட்டிருப்பது கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக எஸ்.வி.சேகரும் தங்கள் வழியிலே என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments