Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தனித்து போட்டியிட பாஜக முடிவா?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (11:42 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென அண்ணாமலை ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை கவனிக்க குழு ஒன்றை அமைத்தார்
 
இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தனித்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்று விட்டால் கூட அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு பெறலாம் என்ற திட்டத்தில் தான் பாஜக தனித்து போட்டியிடப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments