Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலர்ந்தது தாமரை; போட்டியின்றி தேர்வான முதல் பாஜக கவுன்சிலர்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:22 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில் கமுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றிப் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்று வேட்புமனு திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 11 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வார்டில் ஒரு நபர் மட்டுமே வேட்புமனு அளிக்கும் பட்சத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத்தால் வேட்புமனு அளித்த ஒரு நபர் கவுன்சிலராக தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 10 சுயேட்சை வேட்பாளர்களும், 1 பாஜக வேட்பாளரும் வெற்றிப் பெற்றுள்ளனர். இதன்மூலம் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் வெற்றியை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments