Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு உரிமையில்லை.-முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (18:29 IST)
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் ‘இந்திய’ என்ற வார்த்தையை 'பாரதிய' என்று மாற்ற மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில்,

‘’IPC என்று கூறப்படும் இந்திய தண்டனை தண்டனைச் சட்டம், IEA என்ற இந்திய சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றம் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படுவதாக  மக்களவையில் அறிவித்துள்ளது.

புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான  மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்‌ஷ்யா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, என புதிய  சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய தண்டனைச் சட்டம் என்ற பெயர் மாற்றப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு கூறி வருகின்றன.

இந்த நிலையில்,    தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் ‘இந்திய’ என்ற வார்த்தையை பாரதிய என்று மாற்ற மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘’இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு உரிமையில்லை. இது இந்தியாவின்  ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிப்பதாகும். ‘’என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments