Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக- அதிமுக கூட்டணி முறிவு... ''நன்றி மீண்டும் வராதீர்கள்'' என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:11 IST)
நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அதிமுகவினர்  டிரெண்டு செய்து வருகின்றனர்.

அதிமுக தலைவர்களான அண்ணாத்துரை, ஜெயலலிதா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய சர்ச்சை கருத்துகளை அடுத்து, வரும் பாராளுமன்றத் தேர்தலில்  அதிமுக- பாஜக இடையே  கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியளித்தார்.

இதையடுத்து, டெல்லி சென்ற அதிமுக முன்னாள்  அமைச்சர்கள் பாஜக மாநில அண்ணாமலையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு டெல்லி தலைமை மறுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள் பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இத நிலையில்,  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
 

அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. 
 
#நன்றி_மீண்டும்வராதீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  ''நன்றி மீண்டும் வராதீர்கள்'' என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அதிமுகவினர்  டிரெண்டு செய்து வருகின்றனர்.

பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன்,  இந்தக் கூட்டணி முறிவு பற்றி கருத்து கூறமுடியாது. விரைவில் தேசிய தலைமை கருத்துச் சொல்லும்….அதுவரை அமைதியாக இருப்போம்’’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments