Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2015 (22:36 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த ஏப்ரல் மாதம் அரசு கேபிள் டிவி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறி உள்ளதாக, அரசு கேபிள் டிவி தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ராமதாஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா முன்பு ராமதாஸ் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம், வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது. 

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments