Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரத் தடை...

Webdunia
சனி, 1 மே 2021 (22:34 IST)
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு அரசு எச்சரித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கு இந்தியர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே ஆஸ்திரேலிய நாடு வரும் மே 15 ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதுடன். இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பினால் 5 ஆண்டுகள்  ஜெயில் தண்டனை மற்றும் 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் இருந்து வருகிற 4 ஆம் தேதிமுதல் அமெரிக்கா வரை அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  வாஷிங்டன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:  அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பில் அமெரிக்கர்கள் மற்றும் அங்கு நிரந்தரக்குடியுரிமை பெற்றவர்களுக்கு விதிவிதிக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட தேதிக்குள் இந்தியாவுக்குச் சென்ற அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டுமனவும் கூடுமானவரை இந்தியா செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments