Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுப்பு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:50 IST)
தமிழகத்தில் குட்கா வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு விசாரனையில் இருக்கு குட்கா உறபத்தியாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசஙகர் குப்தா ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஒரு குடோனில் இருந்து கைப்பற்ற குட்கா பொருட்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவற்றில் போதைக்கான மூலப்பொருட்கள் இல்லை எனத் தவறான அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் சில முக்கியமான ஆவணங்களால் குட்கா ஊழல் வழ்க்கு சூடிபிடித்தது.

தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக திமுக சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் போன்றோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியது.

இது தொடர்பாக செப்டம்பர் 6-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதர ராவ், கலால் வரி அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதவராவ், சீனிவாசராவ், உமாசஙகர் குப்தா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு அந்த மனுவை ஏற்காத நீதிபதிகள் மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments