Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் ஆட்டோவில் சில்மிஷம் : ஆட்டோ டிரைவரை அடித்த சிறுமி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:31 IST)
சமீப காலமாகவே பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அதிகரித்து வருவது வாடிகையாகிவிட்டது, இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது தன் கையில்  வைத்திருந்த பரீட்ச்சை அட்டையால் அட்டையால் அடித்து தப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த இரண்டு சிறுமிகள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களை பள்ளிக்குத் தினமும் அழைத்து செல்ல ஷேர் ஆட்டோவில் வருபவர் விஜயகுமார். 
 
சம்பவத்தன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தன் அக்காவுக்கு 12 வது பொதுத்தேர்வு என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார்.
 
தனியாக வந்த மாணவியை ஷேர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விஜயகுமார், சிறுமியின் அருகில் அமர்ந்துள்ளார். ஆட்டோவை அவரது நண்பர் ஓட்டியுள்ளார். விஜயகுமார் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தன் கையில் வைத்திருந்த தேர்வு அட்டையால் விஜயகுமாரை தாக்கியதுடன் பலத்த சப்தமிட்டுள்ளார்.விஜயகுமார் அதன் பிறகு ஆட்டோவில் இருந்து ஓடி விட்டார். அவரது நண்பர் சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு ஆட்டோவில் விரைந்து சென்றுள்ளார்.
 
பின்னர் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து  போலிஸார் விஜயகுமாரை கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்