Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. வீடு திரும்புவதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதாப் ரெட்டி

ஜெ. வீடு திரும்புவதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதாப் ரெட்டி

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (15:28 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 44 நாட்களாக, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடைசியாக அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. 
 
இந்நிலையில் முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு வைக்கப்பட்டிருந்த சுவாச கருவிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆனால், அப்பல்லோ தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில், அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி சில கருத்துகளை தெரிவித்தார்.
 
அவர் கூறிய போது “முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர்தான் முடிவு செய்வார்” என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments