Webdunia - Bharat's app for daily news and videos

Install App

365 நாட்களும் தலித் வீட்டில் சாப்பாடு - தமிழிசை சௌந்திரராஜன் அதிரடி முடிவு

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (15:34 IST)
365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
 

 
சேலத்தில் மத்திய பாஜக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்து கொண்டுள்ளார்.
 
பின்னர், சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள பாஜகவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரது வீட்டில் சாப்பிட்டுள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், “தலித் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாரத பிரதமர் மோடி மிகுந்த அக்கறை உடையவராக இருக்கிறார். அவர்களுக்காக பல திட்டங்களை வகுத்திருக்கிறார்.
 
இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதை என் வாழ்நாள் முழுக்க கடைபிடிப்பேன்" என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி..!!

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments