Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த இயக்குநர் வீட்டில் மற்றோரு சோகம் ! திரைத்துறையினர் அதிர்ச்சி

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (16:23 IST)
இயக்குனர் ஜனநாதன் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.

இயற்கை, ஈ,பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இடதுசாரி சிந்தனைக் கொண்டவராக அறியப்படும் இவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு. தற்போது அவர் இயக்கிவரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உதவி இயக்குனர்கள் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில்.

உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்தார்.

அவரது உடலுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். மயிலாப்பூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜனநாதன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல்,அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்தார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு அஞ்சலியும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments